முத்தமிட்டுச் சென்றாள் முகில் காதலி

வெண்ணிலவைத் தொட்டுவிட நினைத்து
உயரே சென்றேன்
தேய்ந்த நிலவு காணாமலே போய்விட்டது !

வண்ண வானவில்லின் அழகைப் பார்த்து
சென்று முத்தமிட நினைத்தேன்
போகுமுன்னே வானவில் கலைந்தே போய்விட்டது !

பொழியாமல் வானத்திலே நிற்பதேன் என்று
முகில்கூட்டத்தை கலைத்துவிட நினைத்தேன்
காற்றும் சூழலும் கைகொடுத்துவிட்டால்
நானே வருவேன் பொழிவேன் நீ உயரே வரத்தேவை இல்லை என்று
பூமியில் கொண்டு விட்டு மழைச்சாரலைப் பொழிந்து முற்றிலும் நனைத்து
என்னை முத்தமிட்டுச் சென்றாள் முகில் காதலி !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-21, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே