காதல்

பிள்ளையென நினைத்தேன் உன்னை 

பாசம் வைத்து பித்தானேன்

ஒவ்வொரு முறை நீ உதைத்த போதும் களித்தேன்

உனக்கென்ன தெரியும் என் மார்பின் வலி

எனைவிட்டு நகரும்போது நடுங்கிப் போனேன்

பக்கமிருந்த நாட்களை பட்டியலிட்டேன்

மற்ற பெண்களைப்போல் நானில்லை 

அதற்கு நான் நாணவில்லை

தாயாய் தாரமாய் தயாராகி வந்தேன் 

தரமற்றவளோ என எண்ண வைத்தாய் 

தவித்து நிற்கும் மனதை அடக்க முடியாமல் தவிக்கிறேன்…

எழுதியவர் : (9-Feb-21, 10:10 pm)
சேர்த்தது : indhumathi
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே