காதலர் தினம்
காதலர் தினம்
மாலையில் மாடத்தில் கண்ட அந்த மங்கை
மயக்கும் விழிகளையுடைய அந்த நங்கை
மலர்களின் மென்மை கொண்ட ஆரணங்கை
மார்கழி பனிபோல் மனதில் படர்ந்த கங்கை
கார்மேக கூந்தல் கொண்ட அந்த கன்னிகை
குளிர் நிலவின் முகம் கொண்ட அந்த வனிதை
குற்றால அருவிபோல் சிரிக்கும் அந்த தேவதை
என் கண்ணிலும் கருத்திலும் நிறைந்த காரிகை
அவள் உள்ளம் அறிய முகநிறம் கொண்ட ரோஜா மலரை
கையேந்தி என் எண்ணத்தை கூற அவள் இடம் நோக்கி
நடை கொண்டேன் காதலர் தினமதிலே இனிய காதலுடனே