மொழித் திருடர்

மொழித் திருடர்

இயல் தரவிணை கொச்சகக் கலிப்பா

வித்தாய் பலநூல் எழுதினநம் சான்றோரும்
சொத்தாய் அதைத்தந்து சென்றார் நமக்கென்று
எத்தாய் தமிழை பயின்ற வெளிநாட்டார்
பித்தாம் அவரார்வம் என்று நினைக்கநாமும்
மொத்தத் தமிழை அவரின் மதம்வளர்க
கெத்தா யவர்தேவன் யேற்றிப் புகழ்ந்ததேனாம்
சத்தி யமிதுநம்மக் கள்காணா விட்டதுமே
முத்தி யடையும் தமிழைவிரை வில்காண்பாய்


........

எழுதியவர் : பழனிராஜன் (10-Feb-21, 11:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 115

மேலே