பேச்சாளர்
பேச்சாளர்
நேரிசை ஆசிரியப்பா
தமிழைக் கற்றா னென்று மைக்கைத்
தந்து தமிழின் மேடை யேற்ற
மூடன் பாடான் கடவுள் வாழ்த்து
கூடி யபேரைஒன்று விடாது
உரைத்து வாழ்த்துவன் பின்னே யவனும்
தமிழை நாட்டை உயர்த்தாப் பேசுவன்
சிந்து என்பான் திரவிளம் என்பான்
குமரிக் கண்டலெ மூரி என்பன்
பலவகை முட்டாள் முளைத்தார் இங்கே
கலகல வெனவும் பேசியென் கடவுள்
இல்லைக் காட்டென கேலி பேசுவான்
எதையார் காட்ட இயேசு அல்லா
எல்லாம் சிறப்பாய் காட்டெனச் சொல்லான்
அவத்தை கொள்ள சிவம்காட் டென்பான்
அயலாம் கிருத்து அல்லா காட்டா
அவரும் கேலியாய் சிரிப்பார்
அடுத்த வாரம் அவனும் காட்டுவனோ
.........