காதல்
உன்னை நேசித்து விட்டதால் என்னை இழந்து நிற்கிறேன்
என் காதலை உணர முடியாமல் நீயோ
காயத்தை மட்டுமே பரிசளிக்கிறாய்
கனவுகளைத் தொலைத்தேன் காதலால்
காலம் தேவையில்லை காதல் மலர
முள்ளென மனதை துளைத்தாய்
சொட்டு சொட்டாய் குருதி பெருக்கெடுக்க
உன்னை விட்டுப் பிரியாமல்
வாழ்வின் விளிம்பில் நான்