வலி

உறக்கமற்ற இரவுகள் 

விடியலே நீண்டு விட்டால் 

உன் அருகில் நானிருப்பேன்

எதன்மீதும் பற்றுதல் இல்லை 

பாவி மனம் உடைந்து துண்டுகளானது

அனைவரும் இருந்தும் அநாதையானேன்

உன் பிரிவால் 

ஊமையல்ல நான் 

மொழிகளை விழுங்கி விட்டேன் 

உனை காயப்படுத்த கூடாதென்று 

நான் ஏன் வேதனை தீயில் வாடுகிறேன்

உன்னை காதலிப்பதாலோ

என் கண்ணீருக்கு விடை கொடுத்து விடு

கண்ணீரும் எனைப் பார்த்து நகைக்கிறது…

எழுதியவர் : Indhumathi (11-Feb-21, 9:31 am)
சேர்த்தது : indhumathi
Tanglish : vali
பார்வை : 35

மேலே