முதுமை காதல்

சுருக்கம் கண்டது தோல் ஈருயிருர் சுண்டி இழுக்கும் காதல் சுருங்கவில்லை..
எத்தனைமுறை பார்த்தாலும் பார்க்க எத்தனிக்கும் போதேல்லாம் புதிதாய் காட்சியாகும் முகம்..
கைகள் வலுவிலந்தாலும் பிடித்திருக்கும் உயிர் வலுவிலக்கவில்லை..
மேனியின் பொலிவு குறைந்தாலும் இன்னும் சிலவார்த்தைகள் வார்க்கும் வெட்கம் தலைவன் பார்வையில் தலைவியை பொலிவாக்குகிறது..
நிகழ்காலம் முன்பு பேசிய காதல்மொழிகளை நினைத்து அழகாய் கழிகிறது..
காமம் கடந்த காதல்..
ஒப்பனை வேண்டாக் காதல்..
புரிதலின் விழைவாய் விளைந்த அளவறியா காதல்..
"முதுமையில்" இருமனம் கொள்ளும் காதல்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (16-Feb-21, 9:50 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : muthumai kaadhal
பார்வை : 188

மேலே