எந்தன் கண்ணன்
புன்னை மரத்தடியில் நின்றுருந்தேன் நான்
என்கண்ணனையே மனதில் பக்தியுடன் துதித்து
எங்கிருந்தோ வந்து வீசிய தென்றல்
மயில் இறகு ஒன்றை தாங்கிவந்து
என்மார்பில் தைத்து போனது அது
சொன்னது .' இதோ நீ துதிக்கும் கண்ணன்
நான் உந்தன் இதயத்தில்' என்பதுபோல்