காற்சிலம்பு

கால் சிலம்பு

நேரிசை வெண்பாக்களால்


அமணர்கை யோங்கியிருந் தும்தட்டுப் ப்பாடு
சமணரின் நாயகர்க்கு சொல்வேன் ---.தமது
மதம்விட்டுக் கோவலசை வன்தேர்ந்தார் சேரச்
சுதனா மிளங்கோ வடி

சென்னிப்பு காரின் பெருவணிகக் கோவலன்
கன்னி மணந்தது மூதுவர்முன் --- பின்னே
கடியறை விட்டு கணிகையைச் சேர
விடியல்காத் தாள்கண் ணகி

சென்னி = சிறப்பான
முதுவர்மும் =. முன்னோர்முன் கடியறை =படுக்கையறை

தறுக்கண்ணுற் றும்கண் ணகிசழக்கு ரைக்காள்
வெறுமை கறுப்புமாம் இல்லில் -- வறுமைவர
போழ்வில் பிரிந்து மதுரைநகர் போந்தனர்
வாழ்வில் செழித்தி டவும்

தவறு கண்ணுற்று = கொடுமைகண்ணுற்று
சழக்கு = குற்றம்
போழ்வில்= பிளவில்


வேரலால்தூம் பைக்கண்டு யேடை யதால்செல்ல
தேராமன் னன்யேனோ கொன்றனன் -- பாரா
முகமாய்சாம் பைக்கொட்டி கொண்டார் உயிரை
விகற்ப முடிவா மிதும்.
யேடை = ஆசை
வேரல் =மூங்கில். ஆல் = நீர் தூம்பு = துளை குழாய் வடிகால்
சாம்பு=பறை
இளங்கோப்ப டைப்பின் ஞெகிழம் சிறப்பாய்
களங்கமிலா தின்றும் நிலைக்கும் --. இளப்ப
மிலையக் கவிக்காளி மேகதூதுக் கும்சொல்
நிலையுணர்ந்து நீயும் படி

ஞெகிழம் = சிலம்பு


.....

எழுதியவர் : பழனிராஜன் (24-Feb-21, 10:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 119

மேலே