வானவில்

சூரியனின் துல்லியமான நிறமில்லா கதிர்கள்
நீரில் மேகம்தாங்கிய நீரில் பட்டு
நிறபேதங்கள் அடைந்து வானவில்லாகிறது
இயற்கைக் காட்டும் நிறமாயாஜாலம் இது
மேளகர்த்தா ராகம் ஒன்றைப் பாடி
அதிலிருந்து நம்மை மயக்கும் ராக
கிருஹ பேதங்கள் பாடும் கர்நாடக
பாடகர் போல வே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Feb-21, 2:02 pm)
Tanglish : vaanavil
பார்வை : 54

மேலே