இரு பூக்கள்
அழகாய் மலர்ந்த சுகந்த மல்லிப்பூ
மெல்ல வாட தொடங்கியது வாசமும்
குறைய... அதை பார்த்து ஏளனமாய்,
பூத்திருந்த வாடாமல்லி வம்புக்கி ழுத்ததாம்
'வாசமிகு மல்லிப்பூவே... உன்பொலிவும்
போய் வாசமும் போய் மாய்ந்திடவா
உன்னை இறைவன் படைத்தான்... என்னைப்பார்
'நான் வாடுவதே இல்லை.... பூவில் சிரஞ்சீவி நான்
என்று சொல்லி வாய் மூடவில்லை.... அங்கு
மேயவந்த மாட்டின் கால் பட்டு நசுங்கியது
இப்போது அதன் அவலக் குரல் ..... மல்லிப்பூ
முழவதும் வாடும் முன் சொன்னது'வாடா மல்லி
இப்போது புரிந்ததா இவ்வுலகில்
நாம் யாருமே சாசுவதம் இல்லையே...
சொல்லி முழுவதுமாய் வாடிப் போனது