23 அவளுடன் பேசும்போது

ஸ்பரி...

இங்கு எனக்கு தரப்பட்ட திட்டமிட்ட பயண அட்டவணையை நான் பின்பற்றவில்லை. ஆனால் அம்மா ஒரு அந்த அட்டவணையின்படியே வழிகாட்டிகளுடன் செல்கிறார். அவருக்கு துணையாக ஒரு நெதர்லாந்து தம்பதி உள்ளனர்.

இப்போது நான் தனியே கடல் எதிரில் இருக்கிறேன்.

கடல் அலையோடு கூடி பூமியில் நழுவி நழுவி ஈரமின்றி நகர்கிறது. வளர்ந்த ஒரு தென்னை மரத்தின் கீழ் இருக்கிறேன்.

பட்டுப்போன இலை ஒன்றை அதிக வீர்யத்துடன் ஒரு சிறு எறும்பு இழுத்து செல்கிறது. இந்த காட்சியை நான் பலமுறை பார்த்திருந்தும் இப்போது யோசிக்க தூண்டுகிறது.

அந்த எறும்புக்கு தான் ஒரு பேரரசன் என்றோ பேரரசன் ஆகி விடுவோம் என்றோ ஒரு எண்ணம் இருக்குமா ஸ்பரி? அது ப்ரக்ஞையுடன் தானாக உழைத்து கொண்டிருக்கிறது.

சற்று நிமிரும்போது...

மனிதர்கள் செல்கிறார்கள். அவர்கள் கையில் பொருள்கள் இருக்கின்றன. அது உணவோ கருவிகளோ... ஆனால் ஏதேனும் அவர்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
அல்லது மனிதன் எதன் மீதோ சாய்ந்து நிற்கிறான் அல்லது தொங்கியபடி நிற்கிறான்.

அவனுடையகலப்படமான மனம் ஒரு பயணத்தை வழி நடத்திக்கொண்டே
இருக்கிறது. அல்லது அவனாக ஏதேனும் பயணத்தில் இருக்கிறான்.

நிரந்தரமற்ற மனதுக்குள்ளிருந்து வாழ்க்கையை தனக்குள் தங்களை பிரதிபலிக்கும் இரு கண்ணாடிகள் போல அவனை அவனே மிரட்டி கொண்டும் கொஞ்சி கொண்டும் வாழ்வதற்கு பழகி விட்டான்.

அந்த எறும்பு என்ன நினைத்ததோ ஸ்பரி...

இலையை விட்டு ஒரு கூட்டத்துக்குள் கலந்து விட்டது. அந்த பட்டுப்போன இலை அப்படியே இருக்கிறது.

அந்த இலை இனி உரமாகி விடலாம். எது அதை உரமாக்கி விடுகிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ஸ்பரி.

எறும்பின் வாழ்வை முகர்ந்து வைத்து உற்று பார்க்கும் என் மனதில் நான் தெப்பமாக நனைகிறேன். காலமும் தூரமும் எத்தனை அர்த்தங்களை கூட்டி வைக்கிறது.

அதை நாம் நம்ப முடியாத தருணத்தில் தலைவிதி என்று கூறி விடுகிறோமா?

ஸ்பரி... உடல்நிலையில் கவனம். எனக்கு நீங்கள் அவ்வப்போது வாட்ஸாப்பில் அனுப்பும் குட்டிகளின் படம் அமைதியை தருகிறது.

அம்மாவை பார்த்து கொள்கிறேன்.

🌻🌻🌻🌻🌻🌻

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Mar-21, 5:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே