பழைய சோறு

“கைக்குத்தல் அரிசியில்
ஆவிபறக்க அவி(துவை)யலுடன்
அனைத்தும் பரிமாறும் வேளையில்,

அவள் கண்ணிமை மட்டும்
எம்மை நோக்கி, எனக்காக,
அவள் சேகரிக்கும் சாதம்.

உள்ளோரிடம் உள்ள சாதம் விட
சற்று அதிகமாக இருக்கும் ,
அவள் அரவணைப்பில்
நான் கடைக்குட்டி அல்லவோ.

மீதமுள்ள பருக்கையை
உப்புடன் தயிறில் நீந்த விட்டு,
மறுநாள் மதிய வேளையில்,

அவள் ஐந்து விரல்களும்
தூவாழியினுள் சண்டையிடுகிறது
சோற்று பருக்கைகளுடன்.

உபகாரத்தோடு உண்கையில்
நாவில் இருந்து, உள் செல்வது,
பருக்கை மட்டுமல்ல
அவளின் பாசமும் கூட...........

பரிமாறிய அம்மாவின் நினைவுகளில்

வெள்ளூர் வை க சாமி

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (10-Mar-21, 11:40 am)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
Tanglish : pazhaiya soru
பார்வை : 124

மேலே