அனல் புனல் அணுவின்

நிலக்கரியால் நீரை காய்ச்சி
நீராவியால் இயந்திரத்தை இயக்கும்
நவீன அறிவியல் கண்டது மனிதம்

இயந்திரங்களை இயக்க எண்ணையை
இப்புவியில் தோண்டியெடுத்து
இடப்பெயர்வுகளை கண்டது மனிதம்.

அனல் புனல் அணுவின் வழியாய்
மின்னாற்றலை கண்டு பிடித்து
இயங்கும் இயந்திரத்தை கண்டது மனிதம்

கதிரவன் ஒளியில் வெளிப்படும் அனலை
காந்தமென இழுத்தே மின்சாரமென
மாற்றி புதுவகையான பொருள்கண்டது மனிதம்

காற்றின் வேகத்தை விசிறியின் துணையால்
கட்டுப்படுத்தி மாற்றி மின்சாரத்தை
கண்டே எழுச்சியோடு சிலிர்த்தது மனிதம்

மின்னாற்றலை கலனில் சேமித்து
மின்னோட்டத்தின் பலனால் பலவகை
அறிவியல் கருவிகளை இயக்கியது மனிதம்

எங்கும் மின்சாரம் என்ற திறனால்
எல்லா இயந்திரத்தையும் இயக்கிய போதும்
இருந்த மனிதம் சிதைவதும் வளர்ச்சிதானே.
~~~~~~ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Mar-21, 10:27 am)
Tanglish : anal punal anuvin
பார்வை : 43

மேலே