அச்சமில்லை அச்சமில்லை
ஆங்கில மோகத்தால் நுனி நா மேல்தாடையில் ஒட்டாமல் பிதற்றும் உங்களை கண்டு
அச்சம்மில்லை அச்சமில்லை!!!!
உ௬ எழுத்தகளை மட்டுமே நன்கறிந்து அதை மட்டுமே நாகரீகம் என எண்ணும் உனைக்கண்டு
அச்சமில்லை அச்சமில்லை
ஏனெனில் நான் ௨௪௭ எழுத்துக்களை நன்கு அறிந்தவள்
ஆங்கிலம் மொழி அது ஒன்றும் அறிவல்ல எனைவிட ஒரு மொழி மட்டுமே நன்கு பேச தெரிந்த உன்னால்
அச்சமில்லை அச்சமில்லை
ஏனெனில் நீ தொழிலாளி என்ற சொல்லை கூட சரியாக உச்சரிக்க இயலா நீயும் ஓர் மூடனே