கரம் பற்றி தூக்கிவிடு
கரம் பற்றி தூக்கிவிடு
*****
இல்லார்க்கு செல்வங்கள் அள்ளியே
அளித்திடும் அன்புள்ளத் திருமகளே
கல்லார்க்கும் நாதிருத்தி கவிபாட
வைத்திட்ட கருணைமிகு கலைமகளே
வல்லமை யில்லாது வருந்திடும்
மாந்தர்க்கு வீரமிடும் சக்தியவளே
தள்ளாத இவனையும் கரம்பற்றித்
தூக்கிவிடு காசிவிசா லாட்சியே!