இந்தியைக் கற்றும்

ஓ இளந்தமிழர்களே வேற்று மொழியை
பலவற்றை கற்றே தெளியுங்கள் ஆழமாகவே
தமிழ் மொழியைத் தூற்றும் போக்கை
நம் அடிமனம் எளிதாய் அகற்றிவிடுமே
தமிழைப் போற்றும் வேற்று மொழிக்கூட்டம்
தமிழைச் சிதைக்க நோட்டமிடுவது தெரியும்
ஆங்கிலம் அறிந்தீர் அயல்நாடு சென்றீர்
அம்மொழியை மாற்றத் துணிந்தீரோ
இந்நாடு வந்து எந்தமிழை அறிந்தோர்
எம் மொழியை மாற்றியதை புரிந்தீரோ
எல்லா மொழிச் சொல்லும் எந்தமிழில் நுழைந்து
இம்சையித்து வருவதை களைந்தீரோ
குயவன் செய்யும் பானையிலே சிறு மணல்
சேர்ந்தால் ஓட்டை உண்டாகும் அறிவீரோ
ஆதிமொழித் தமிழுள் அயல்மொழி வார்த்தைகள்
புகுந்துக் கொண்டு ஆள்வதை தெளிந்தீரோ
இந்தியைக் கற்றும் சால தெளியுங்கள்
தமிழ் எவ்வளவு உயர்வென்று தெரியவரும்
மொழியை போற்றுவோரை ஏற்றுக் கொள்ளாதீர்
தமிழை உணர்ந்தே கற்றுத் தெளிவடைந்தால்
கற்றோர் உயிருக்கு தமிழே நீண்ட ஆயுள் தரும்.
~~~~~~ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Mar-21, 10:26 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 34

மேலே