சிலப்பதிகாரம்

அழகழகாய் தமிழ் விரியும்
ஆனந்த நீர் சொரியும்
இதழ் இதழாய் கவி வரிகள்
இயம்புகின்ற அழகு புரியும்
தொகை தொகையாய் தமிழர் வாழ்வு
பெருந்தொகை வாழ்வியல் சிறப்பு
வகை வகையாய் வாழ்ந்த கதை
தமிழ் வாசம் வீசி வாசம் வீசி
வண்ணத்தமிழ் காவியமாய்
வரலாறு வந்தது

பெண்ணியம் போற்ற இங்கு _அவள்
கண்ணியம் காக்க எங்கும்
வீரம் தான் விடை -என
வீறு பெற்ற வீரக்காப்பியம்

ஆடற்கலையின் ஆழம் கண்டு
தேடற்கலைகளின் திறன் கொண்டு
இசையுடன் இயல்கள்
பாடற்கவித்திறன் அதுவும் கொண்டு
தமிழ்த்திசைகள் திசைகளாய்
தித்திக்கும் முத்தமிழ்க்காப்பியம்

எத்தமிழ் வேண்டும் எனினும்
அத்தனையும்
முத்துக்களாய் முத்துக்களாய்
சொத்தென மொத்தமாய்
கைகளில் முத்தமிழ் முதுசமாய்......

கோவலன் எனும் குடிமகனை நிறுத்தி
பாவலன் வரைந்த படிக்கோலம்
பார் ஆண்ட மாமன்னனின்
போராட்ட மண்ணின் கதை
பொற்கொல்லன் சொற்கேட்டு
கற்புக்கும் கண்ணகிக்கும்
காதலுக்கும் காவிரிப்பபூம்பட்டினத்துக்கும்
கதையாகிப்போன கதை

சிந்திய முத்துப்பரல்களுக்கும்
சிந்தாத மாணிக்கப்பரல்ளுக்கும்
இடையே நின்று விடையாய் நின்று
முந்தி நின்று கூறும் சொல்
எப்பொழுதும்
அச்சாரமே அது மெய்ச்சாரமே என
பாடம் சொன்ன வாழ்க்கைப்பாடம் சொன்ன
வாழ்வுக்காவியம்
வழக்குக்காப்பியம்

ஆண்ட மன்னன் மாண்ட செய்தி
வாழ்ந்த மன்னன் மாழ்ந்த செய்தி
ஆழ்ந்து நோக்கின்
அனைவருக்கும் படிப்பே....

எழுதியவர் : நிரோஷனி றமணன் (14-Mar-21, 6:10 am)
சேர்த்தது : நிரோஷனி றமணன்
பார்வை : 253

மேலே