சிவராத்திரி
சிவ ராத்திரி
அர்த்தநாரீஸ்வரனை குவலயத்தோர் துதித்துப் போற்றும் ராத்திரி
ஆறுமுகனை நெற்றிக்கண் சுடரால் படைத்தவனைப் போற்றும் ராத்திரி
இடது பாதம் தூக்கி நடனமாடும் இறையைப் போற்றும் ராத்திரி
ஈசனாகி மன்மதனை எரித்த முக்கண்ணனைப் போற்றும் ராத்திரி
உடலில் வென்னீர் அணிந்தவனை கொண்டாடிப் போற்றும் ராத்திரி
ஊழ்வினை அழித்து நம்மை காக்கும் நாதனைப் போற்றும் ராத்திரி
எங்கும் நிறை பிறைசூடிய பெருமானைப் பக்தியுடன் போற்றும் ராத்திரி
ஏழு பிறப்பிலும் உயர்வடைய பஞ்சாக்ஷரனைப் போற்றும் ராத்திரி
ஐங்கரனுக்கு கனி நல்கிய ஆதிஅந்தம் இல்லாதவனைப் போற்றும் ராத்திரி
வாமபாகத்தை உமைக்கு அளித்தவனைத் துதித்துப் போற்றும் ராத்திரி
வருடத்தில் ஒரு முறை வரும் சிவ ராத்திரி என அறிவோம்