சபதம் கொள்வோம்

மக்கள் நலனை
கருத்தில் கொண்டு
தேர்தல்....
நடந்த காலங்களில்
அரசியல்வாதிகள்
ஒரு காலத்தில்
வெற்றி பெற்றார்கள்
என்பது உண்மைதான்...!!


ஆனால்...
இப்போது எல்லாம்
நடக்கின்ற தேர்தலில்
வெற்றி பெறுவது
அரசியல்வாதிகள் அல்ல...!!

மக்களிடம் இருக்கும்
அறியாமையும்....
வறுமையும்தான்
வெற்றி பெறுகிறது...!!

நாட்டில்
பணநாயகம் தோற்று
ஜனநாயகம் வெற்றிபெற
சபதம் கொள்வோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Mar-21, 10:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sabatham kolvum
பார்வை : 445

மேலே