மானே மானே வா வா

மானே! மானே! வா!வா!
மாடித்தோட்டம் பார்க்க வா!

கீரை வகைகள் உள்ளது
கண்ணுக்கு அது நல்லது

முடக்கத்தான் கீரைப் படருது
மூட்டுவலியைப் போக்குது

மண்ணில் கிழங்கு விளையுது
மாவுச்சத்துக் கிடைக்குது

பூசணிப்பூ அழகாய் பூக்குது
புற்றுநோயைத் தடுக்குது

முருங்கை நீளமாய் இருக்குது
மூல நோயை  விரட்டுது

வாழைத்தண்டு  வளருது
வாய்ப்புண்ணை ஆற்றுது

மாம்பழம் கொத்தாய் தொங்குது
மாதவிடாய் பிரச்சனையை நீக்குது

மானே! மானே! வா! வா!
மாடித்தோட்டம் பார்க்க வா!

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (20-Mar-21, 5:26 pm)
பார்வை : 62

மேலே