மனிதனின் வாழ்க்கை

மனிதனின் வாழும் நாள்
இறுதியாக முடிவு
செய்யப்பட்ட பின்புதான்
அவனது ஜனனம் பூமியில் ..!!

தனது வாழ்நாள் பயணம்
எப்போது முடிவு பெறும்
என்பது தெரியாமல்
மர்ம நாவலின்
கதையை போல்
மனிதனின் வாழ்க்கை ..!!

நாம் பூமியில்
எத்தனை காலம்
வாழ்ந்தோம் என்பது
முக்கியமில்லை
எப்படி வாழ்ந்தோம்
என்பதில் தான்
வாழ்க்கையின்
அர்த்தமுள்ளது ...!!

வாழ்க்கையில்
நல்லவன் என்ற பெயர்
எடுத்து வாழவில்லை
என்றாலும் ...

கெட்டவனாக
வாழவில்லை
என்பதில் தான்
உன் வாழ்க்கையின்
நிம்மதி, சந்தோசம்
நிறைந்து உள்ளது..!!

வாழ்ந்து முடிந்தபின்
நம்மை யாரும்
மறக்கக்கூடாது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Mar-21, 12:42 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 351

மேலே