வேட்பாளர்

வேட்பாளர்
👆👆👆👆👆👆👆👆👆👆👆
அண்ணன் என்றே பெயரெடுத்து
அனைவரையும் அன்று தம்பியாக்கி ,
வாய் நிறைய அழைத்திடுவான்
தாய்க் குலமாய் பெண்களையே ...

கையைத் தூக்கிக் கும்பிட்டே
பொய்யை விதைப்பான் சிரிப்போடு ,
வாவா என்று காடழைக்கும்
வயதிலும் அத்தனை உழைப்பாமே...

இலவச மழையில் நனைவிப்பான்
தள்ளுபடி நமக்கே குளிரெடுக்கும் ,
வானத்தைக் கூட வளைத்திடுவான்
நதிகளை எல்லாம் இணைத்திடுவான்..

கட்சிகளைக் கெஞ்சிப் பிணைத்திடுவான்
துஷ்டனையும் கொஞ்சி அணைத்திடுவான்,
சீட்டுப் பிரித்து கொள்வதற்கே
சிரித்தபடியே அடிச்சுக்குவான்..

உச்சிக் கால வெய்யிலிலும்
கட்சிச் சாயம் பூசிக்குவான்,
அறிக்கை என்றே கூறிக்கிட்டு
கிறுக்கி வச்சு அதைப் படிப்பான்...

பல்லைக் காட்டி சிறித்தபடி
பார்த்தால் போடுவான் கும்பிடுமே ,
கள்ளச் சாவி நாம் கொடுத்தே
களவு செய்ய அனுமதிப்போம்....

பகலில் நாட்டைத் திருடத்தான்
இரவில் தருவான் சிலநூறு ,
விரலில் மையைத் தடவிவிட்டால்
விழாவும் அப்போ நிறைவுபெறும்.

க.செல்வராசு.....
🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

எழுதியவர் : க.செல்வராசு (22-Mar-21, 2:55 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 69

மேலே