பெண், இறைமை

மண்ணைப் படைத்தான் பெண்ணைப் படைத்தான்
ஆணோடு பெண்ணை சேர்த்தான் மானிடம்
பெருக ஆனால் இதுதான் வாழ்கை எனவில்லையே
பின்னேன் இவ்வுலகம் பெண்ணை ஒரு
மோகப் பொருளாய் எப்போதும் பார்க்கின்றது
மோகத்தை துறந்து கொஞ்சம் காதலைக்
காட்டிட பழகிக் கொண்டால் காதல்
எது என்பதும் புரியும் மோகமும்
மெல்ல மறையும் இறையோகம்
அங்கு புலப்படு மே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Mar-21, 10:06 am)
பார்வை : 119

மேலே