மரணம் வெல்வோம்

சார் சார்....
உள்ள வாங்க .
நீங்கதானே சீனிவாச சாஸ்திரிகள்.
ஆமாம். எனக்கு போன் பண்ணி கேட்டது நீங்கதானா ?
ஆமா சார்.
உக்காருங்க .
தூர தூரமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள் சங்கரும் சார்லசும்.
சொல்லுங்க நான் என்ன பண்ணனும் ?ஒன்னும் இல்ல சார் .நாங்க பத்திரிகையிலிருந்து வர்றோம். ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கிற சிறந்த பழக்கவழக்கங்கள் குறித்து வெளியிட இருக்கிறோம். நம்ம ஏரியாவுல இருக்கிற பிராமண இனத்திலே நீங்கதான் ரொம்ப வயசானவங்க .அதுதான் உங்களுடைய கருத்துக்களை கேட்கலாம்னு வந்திருக்கோம்.
சரி கேளுங்க.
இன்னிக்கி கொரானாங்கிற கிரீமி உலகம் முழுவதும் மக்களை பயமுறுத்தி கிட்டு இருக்கு .மனிதர்கள் மூலமா மனிதர்களுக்கு பரவும் என்று சொல்லி நிறைய வாழ்க்கை மாற்றத்தை கடைபிடிக்க சொல்றாங்க. இனிமே அந்த கிரீமியோட நாமும் வாழ கத்துக்கனும்னு தலைவர்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி கொசு கூட வாழ்ந்துகிட்டு இருக்கிறோமோ எப்படி சாக்கடை நாத்தத்தோடு வாழ்ந்துகிட்டு இருக்கிறோமோ அதுமாதிரி .அது நம்ம உயிரை பறிக்காம இருக்கணும்னா வாய மூடிக்கிட்டு கையை கழுவிகிட்டு இப்படி பல மாற்றங்களை சொல்றாங்க இதப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

இப்ப என்ன சொல்றா ?யாரும் கைகொடுக்கக்கூடாது .நமஸ்காரம் பண்ணனும் .வாய மூடிக்கானும் .வெளியே போய் வந்தா கால் கைய கழுவனும்.ஒரு நாளைக்கு ஐந்து முறையாவதுகை கழுவனும்.ஒருத்தரோட ஒருத்தர் பேசுறதுக்கு ஒரு மூன்று அடி இடைவெளி விடனும் .கண்ட இடத்துல கை வைக்கக்கூடாது .எச்சில் துப்பக் கூடாது .எந்த பொருளாக இருந்தாலும் கழுவி எடுத்து வைக்கணும். கண்டபடி சுத்த கூடாது. வீட்டுக்குள் இருக்கணும் .இதுதானே?
ஆமா சார்.
இது எல்லாமே அக்ரஹாரத்து வாழ்க்கை முறையில் இருந்துச்சு .யார் பேசினாலும் தள்ளி நின்னு பேசணும். வாயில துண்டு வச்சு பேசணும் அவா அவா ஆத்து நபராகஇருந்தாலும் கை கால் வாய் கழுவி கிட்டுத்தான் உள்ளே வரனும்.ஆத்துக்குள்ளே மனைவி மகன் மகள் யாரா இருந்தாலும் காபி குடித்தாலும் தண்ணி குடிச்சாலும் தூக்கி தான் குடிக்கணும் .குடிச்ச பிறகு வாய் கொப்பளிக்கனும். ஆத்துக்குள்ள யாரும் யாரையும் தொடக்கூடாது. அதுக்கு பேரு மடி. கட்டிப் பிடிக்கிறது பேசறது இது எல்லாமே ஆச்சார குறைச்சல் .ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா துணி எல்லாம் பின் பக்கமாக போட்டுட்டுபோய் குளிச்சுட்டு வேற துணி மாத்திட்டுத் தான் வரணும் .இந்த பழக்கம் அவங்கவங்க ஜாதியிலேயே இருந்துச்சு .ஆனா மத்த ஜாதிக்காரர்களைமட்டும் தான் இவங்க அடக்குமுறை பண்றாங்கன்னு சொல்லி சொல்லிஒரு பெருங்கூட்டம் அக்ரஹார வாழ்க்கைமுறையை அழிச்சிரிச்சி.அந்த வாழ்க்கை முறையைத்தான் இன்னிக்கி கொரோனாவை எதிர்த்துஉயிரோட வாழனும்னா எல்லோரும் கடைபிடிச்சிவாழனும்னு சொல்றாங்க.
இங்கே எங்கே ஜாதி வந்தது .சுத்தமான வாழ்க்கை முறை எங்கிருந்தாலும் அதை எல்லாரும் கடைபிடிக்கலாம். அதனால இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடல. எது சுகாதாரமான வாழ்க்கை முறையோ எது ஆரோக்கியமான வாழ்க்கை முறையோ அதை எல்லாரும் கடைபிடிச்சி மரணத்தை வெல்லலாம்.வாழ்க்கை தான் முக்கியம். ஜாதியைச் சொல்லி நல்ல வாழ்க்கை முறையை நாசமாக்கி விடக்கூடாது.
நல்லது சார் நாங்க வரோம்.
என்ன சங்கர் இவர் பேசுனது பத்தி என்ன நினைக்கிறே? சார்லஸ் கேட்டார் .ஒன்னு ம்இல்ல. பல நூற்றாண்டுகளாக நம்ம பாரத நாடு இப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருக்கு. வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் அழிச்சிட்டா ஒரு நாட்டினுடைய வளர்ச்சி யைஅழித்துவிடலாம் அப்படின்னு சில பேர் முயற்சி பண்ணி அந்த அழகான வாழ்க்கை முறையை ஓட ஓட விரட்டி இருக்கலாம். ஆனாலும் இப்ப வேறு ரூபத்தில் அந்த வாழ்க்கை முறை தான் வந்துகிட்டு இருக்கு. நல்லது.
நல்லது எங்கு இருந்தாலும் எடுத்துக்கிறதுதான் நல்லது. சரி வா போகலாம்.
இருவரும் வேறு ஒருவரை பார்க்க போனார்கள்.

எழுதியவர் : சு.இராமஜோதி (8-Apr-21, 5:48 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : maranam velvom
பார்வை : 379

மேலே