புவிஈர்ப்பு விசை செயலாற்றுப் போய்விட்டதோ என்று தோன்றுகிறது
நிலவில் நடந்தால்
மிதப்பது போலிருக்கும்
நிலவின் புவிஈர்ப்பு விசை
பூமியின் ஆறில் ஒரு பங்கு
அறிவியல் கண்டறிந்து வந்த உண்மை !
என் ப்ரிய காதலியே
உன் நினைவில்
பூமியில் நான் நடந்தாலும்
மிதப்பது போல்தான் இருக்கிறது
புவிஈர்ப்பு விசை செயலாற்றுப் போய்விட்டதோ
என்று தோன்றுகிறது !