கோப்பெருந்தேவி

கோப்பெருந்தேவி.. என்ற
பெயரை எழுதினாலே
நல்ல கவிதை ஒன்றை
எழுதினதாய்த் தோன்றும்...

பெயருக்கேற்ற ஆளுமையோ
ஆளுக்கேற்ற பெயரோ...
தீர்ப்பு எதுவாகினும்
அது எல்லோர்க்கும்
உடன்பாடானதாகவே இருக்கும்...

கோவில்பட்டி.. எட்டயபுரத்திற்கு
மிக அருகில்...
கோப்பெருந்தேவியின்
பழகு தமிழ்
பாட்டுக்கொரு புலவன்
பாரதியின் அழகு தமிழுக்கு
மிக மிக அருகில்...

வளங்களின் ஒளியில்
என்றும் ஜொலிக்க
வானமும் வசப்பட
வசந்தங்கள் வரங்களாக
கோப்பெருந்தேவிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
😃👍💐🙏👏🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Apr-21, 6:21 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 122

மேலே