இழப்பு
என்னுடன் பேசுகிறாள் காதல்
என்னுடன் மட்டும் பேசுகிறாள் காதல்
என் சோகத்தில் நிற்கிறாள் காதல்
என்னை பார்த்து சிரிக்கிறாள் காதல்
என்னை எப்போதும் மதிக்கிறாள் காதல்
தன்னை பற்றி பேசுகிறாள் காதல்
என்னை பற்றி கேட்கிறாள் காதல்
முன்னாள் நிற்கிறாள் காதல்
நான் முன்னேற நினைக்கிறாள் காதல்
என
நினைத்து நினைத்து இழந்தேன் அவளை
காதலியை அல்ல
தோள்கொடுத்த நல்ல தோழியை !!