எத்திக்கும் தித்திக்கும் எந்தமிழ் செந்தமிழ்

வான் முகில் இனமும் கலைந்தது காலை கதிரவனை தொட்டு...
நான் துயில் அதையும் முறித்தேன் இனிய தமிழ் கானா பாட்டு கேட்டு...

முத்தமிட்டு அன்னையிடம் பிரியா விடை சொல்லி...
முத்தமிழ் கற்க நான் சென்றேன் என்னுடைய பள்ளி...

பள்ளி முடிந்ததும் நான் சென்றேன் ஒரு நூலகம்...
பைந்தமிழ் படித்ததும் குளிர்ந்தது வெண்பனி போல்-அகம்...

அந்தி மயங்கவும் நான் சென்றேன் என் வீட்டின் வழி...
சந்தி எங்கிலும் ஒலித்தது என் தாய் மொழி...

வழியில்....

அம்மா என்றழைத்த கன்று ஒன்றையும் கண்டேன்...
ஆஹா...ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...

ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...

என் தமிழ் வெண்பாவிலும் உள்ளது, வெண் நிற ஆவிலும் உள்ளது என்று மிகவும் பூரிப்பும் பெருமையும் கொண்டேன்...

எழுதியவர் : அருண் கார்த்திக் (9-Apr-21, 6:59 pm)
சேர்த்தது : அருண் கார்த்திக்
பார்வை : 651

மேலே