காதல் ஏக்கத்துடன் விடலை பையன்

(

பிறப்பு ஓன்று தான் பிரிவுகள் நம்மை தொடாத வரை???

நாம் இணைந்து நிற்கும் தருணம் இனி எதிர்பார்த்தே மறையட்டும்!!

சுகம் தேடும் பறவை சூழ்ந்து இருப்பின் ஏது பயன்
சொர்க்கம் கிடைக்குமா என்ன??

கூட்டமாய் தேன் கூட்டமாய்
நினைவுகள் யாவும் தவிக்குதே
யாருக்கும் தர மறுக்குதே
மீண்டும் வர துடிக்குதே!!!

ஆயிரம் வரிகளையும் உனக்காக
அனைத்திட துடிக்குதடி ??

மோக எண்ணங்களோடு உன்னை மட்டும் துரத்திட நினைக்குதடி!!!

காய்ந்த சிறகுகளே மண்டி இடுங்கள் மறுபிறவி தேட ??

நியாபகங்கள் தினம்தோறும் நின்று
ஏக்கங்களோ கலையாமல் கருத்து சொல்ல வழி மறுக்குதடி!!!

மனிதம் தோன்றும் முன்பே
மகத்துவம் இங்கே வாழ்ந்ததடி!!!

இனி காட்சிகளில் தோன்றி
கனவுகளில் மறைந்தாலும்
மாற்றம் நிகழுமோ (நிகழதோ)
பெண்ணே!!!!!!

இமைகள் மூடி மறைத்தாலும்
என் இரவல்கள் தேடி ஓடுதடி??

மன குழப்பங்கள் விதியோடு வீதியில் விளையாட
கொட்டிய வார்த்தைகளை கோர்த்து கொண்டு
மேல் முறையீட
முடிவாய் வந்தேனே!!!!
நீதி கேட்டு உன் கூண்டுக்குள்ளேயே
ஏறி நின்றேனே!!!!!

உன்னோடு அண்டி இருக்கதானே
ஆத்மார்த்தமாய் ஒண்டி இருக்கதானே!!!!!

உன்னை தொடுகை எனும் தோட்டத்தில் தொலைந்தே போனேன் அதில்
இன்றும் தோற்றே போனேன்!!


திசை தெரியா பறவைக்கு பார்வை மட்டும் இருந்து என்ன பயன்??

நேரம் இல்லாமல் பறந்தேனே
ஒரு நேரம் வரும் வரை பரப்பேனே!

உணர்ந்தேனடி உருவம் இல்லா
என் தனிமை
நீ சென்ற பிறகு!!!??

இருப்பவையும் ஒவ்வொன்றாய்
இழப்பவையாக மாறியது ஏணடி
நீ பதில் கூற மறுப்பது ஏணடி??


புத்தக நோட்டை தொட மணம் இல்லாமல்
முத்தகோட்டையை அடைய மணம் முந்தியடிக்குதடி???

உதட்டின் சாயம் தனை தீண்டாமல்
என் வாழ்க்கையின் சாபம் தாண்டி ஓடுமோ!!!!

என் தேடல் பயணம் தொலைவில் இருந்தாலும் போதும் !!!

தேகம் எனை சுட்டாலும்
தேடல்கள் என்றும் தீராத
ஓய்ந்தும் நிற்காதே???

பாதி மணம் அடித்து கொண்டாலும்
பழைய மணம் ஏங்கி நிற்குதடி??

அசைபாடும் எந்தன் நான் நாவோ
இசை பாடும் உந்தன் நாவோடு
தீண்ட அலைவதேன்???

எதிரிகளை ஏமாளியாக ஏற்க தோணுதடி
உன் சீரான செவ்வுடல்
செவ்விழியில் படும் போது
எம் செங்குருதியோ
அரிதான பாடம் படிக்குதடி!!!!!!

பார்க்கும் போது பரவசமாய்
புது புது மாற்றத்தை அண்டும்
மது கோப்பையிலே கூடி புக
அறையினுள் திறன்கள் ஆட்டம் போட தோணுதே!!!

பதிப்பு எனும் மதில் ஏறி
பாதிப்பை அழுத்தமாக்கி
இரவை பரவசபடுத்த
பகலை இரவல்களாக ஆக்கி
ஆசையை அதில் கொஞ்சம் ஊற்றி
காட்சி எனும் கடைசி அடியில் அடங்குகிறேன்!!!

நீர் திவளைகளை தெளித்தும்
நிர் மூலமாகமல்
நித்தமும் நினைப்பேனே!!

உன்னை களவாட வருவனோ கருவில் இருந்து மீண்டும்

இனியொரு மாற்றமும்
இனியதொரு மாற்றமும்
இணைந்தே
இனியதாய் பிறக்கட்டும்!!!

எழுதியவர் : கலையரசன்.ம (10-Apr-21, 9:36 am)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 119

மேலே