என்றாவது ஒரு நாள் ?????????????????

ஆச்சரிய குறியாய்
கல்லூரி வாழ்கையை
தொடங்கிய நாம்,
கேள்விக்குறியுடன்
கடைசி நேரத்தில்
கை குலுக்கி
பிரிய போகிறோம்...!

பந்தங்களை மறந்து
சொந்தங்களை பிரிந்து,
ஒரு கூட்டு பறவைகளாய்
கூடி வாழ்ந்த நாம்
மீண்டும் சந்திக்கும்
தேதி அறியாமலேயே
கூடுகளை பிரித்து
விட்டோம்....!

பசுமரத்தாணியாய்
பதிந்துவிட்ட
எத்தனையோ நினைவுகள் ...!

சிலுவைகளாய்
சுமத்தப்பட்ட
எத்தைனையோ
வேதனைகள்...!

சுகங்களில் சுவைகொடுத்து,
சோகங்களில் சுமை தடுத்து
முழு நேரமும்
தோள் கொடுத்து வந்த
தோழர்களைப் பிரிந்து
""நாளை"" என்றோர்
வான வீதியில்
ஊர்வலம் செல்லப் போகிறோம் .......!

எல்லோருடைய
வாழ்க்கைப்
பயணத்துள்ளும்
எதிர்பாராத எத்தனையோ
வழிப்போக்கர்களின்
காலடி சுவடுகள்...!

சுமைகளிலும் சுகமாய் இக்கல்லூரி வாழ்க்கை, காலம் கடந்து கனவுக்குள் புகுந்து காட்சியை மாறும்போது
அந்த கண நிமிடமும் கண்ணீருக்கு கடிதம் போடும்...!

இதயத்தில் ஒரு இறுக்கம் தோன்றும்
என்றாவது ஒரு நாள்

மீண்டும் நம் கல்லூரிக்கு வாசம் செய்தால்.......நாம் அமர்ந்திருந்த வகுப்பறை ,அளவில்லாமல் செய்த சேட்டைகள் கரும்பலகை உள்ளடக்கிய விலைமதிப்பில்லாத வார்த்தைகள்

இவற்றுடன் ஊடே அமர்ந்திருந்த நண்பர்களை காணாத பொது.........
என்றாவது ஒரு நாள் .........................!!!!!!

இவண்
தமிழ்கரியன்


எழுதியவர் : santhosh (25-Sep-11, 1:58 am)
சேர்த்தது : tamilkariyan tamilan
பார்வை : 272

மேலே