உயிரோடு தான் இருக்கிறேன்....!!!!!!!!!!

ஞாபகம்
இருக்கிறதா-என்
அன்பு தோழியே....?

நம்மில் இது
கடைசி நேரம்......

தேனீக்களாய்
பூக்களிடம்
புகழிடம் தேடிய நாம்
பூக்களை மறந்து விட்டு
புதுக்கூடு நுழைய போகிறோம்......!

தேனாய் சுமந்த
அந்த நினைவுகள்
தேம்பியழ
வைக்குதடி ....!

கல்லூரியின்
கருவறையில்
கடைசி நாட்களில் நாம்...!

சிறகில்லா
நிலையில்
அன்று பறக்க நினைத்தோம்...!

இன்றோ
சிறகுகள் விரிந்தும்
பறக்க
மனமில்லையே.....!

சாதனைகளுக்காய்
சறுக்கி விழுந்த
மைதானம்....!

வேதனைகளுக்கெல்லாம்
விடுமுறை கொடுத்த
விடுதியின் தனிமை...!

சாரல்களுடன்
சங்கீதம் பாடிய
சாலையோர பூக்கள் ...!

தூரல்களாய்
சிலிர்த்து போன
சில காதல்
மீறல்கள்..!

வகுப்பறைக்குள்
வசந்தம் பாடிய
நாட்கள்...!

வரண்டாவில்
வம்புகள் செய்த
நேரங்கள்....!

பேருந்தில்
பேச்சுக்காய்
செய்த நகைச்சுவைகள் ...!

மீண்டும் வருமா
என் அன்பு தோழியே...?

சாதங்களை மட்டும்
பகிர்ந்துகொள்ளவில்லை-நாம்
நம் ஜன்னலுக்குள்
நடந்த
சோகங்களையும்
பகிர்ந்து கொண்டோம்...!

நிமிடத்திற்கு
ஒருமுறை
நிஜங்களை
பகிர்ந்து கொண்ட நாம்
வருடகணக்குகளாய்
வாசணையில்லாமல்
போக போகிறோம்...!

கண்களால்
பேசிக்கொண்டு
காவியம் பாடிய நாம்
கண்கள்
காண முடியாத
தூரத்தில்
கடைவிரிக்கபோகிறோம்...!

முகவரிகளையும்
முகங்களையும்
"ஆட்டோகிராப்"
புத்தகத்துள்
புதைத்துவிட்ட நாம்
ஞாபகத்திற்காய் திருப்பும்
ஒரு சில
பக்கங்களினால்,
வரும் கண்ணீரில்
இருக்கிறது
நம் நட்பு....!
அந்த கண்ணீர் சொல்லும்,,,,,,,,

""ஆம், உன் நண்பன்
உயிரோடு தான்
இருக்கிறேன்....""

இவண்..............
தமிழ்கரியன் .......











எழுதியவர் : சந்தோஷ்.... (24-Sep-11, 11:12 pm)
சேர்த்தது : tamilkariyan tamilan
பார்வை : 289

மேலே