விழியில் காதலுக்கு வரவேற்பு

தென்னம் பூப்போல வெள்ளைச் சிரிப்பு
தென்றல் பாடுது கூந்தலில் தமிழ்ப்பாட்டு
கன்னத்தில் விரியுது கவின்மிகு மாந்தோப்பு
மின்னல் விழியில் காதலுக்கு வரவேற்பு !

தென்னம்வெண் பூப்போல வெண்ணிற புன்சிரிப்பு
தென்றலும் பாடுது கூந்தலில் ஓர்பாட்டு
கன்னத் தினில்விரியும் சேலத்து மாந்தோப்பு
மின்விழிகா தல்பேசு தே !

------வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-21, 7:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே