கடற்கரை

கைதீண்டிய ஸ்பரிசத்தை விட
பாடல் வரி கொண்டு அணைத்தமையால்
அலையாய் எழுந்த நினைவுகள்
கரை மோதி மறைய யத்தனித்தனையோ....

என்ன குழப்பம்
தயங்கி வந்து தழுவி நின்றாய்
நழுவிச் சென்றது நாழிகை
அசையாது நின்றேன் நான்
உன் பாதம் வருடிய மணல்
முற்றுகையிட்டபடியால்
இன்னும் கடற்கரையில்
- Saishree. R

எழுதியவர் : Saishree R (12-Apr-21, 1:49 am)
சேர்த்தது : Saishree R
Tanglish : kadarkarai
பார்வை : 103

மேலே