இதழிடையே புன்னகை எனும் நியூட்டனின் ஒளிக்கோடு

கருங்கூந்தலில் அழகிய வகிடு எனும் நேர்கோடு
கரும்புருவம் நெற்றியில் அழகில் வளைந்தகோடு
இதழிடையே புன்னகை எனும் நியூட்டனின் ஒளிக்கோடு
விழியசைந்தால் நெஞ்சில் ஆயிரம் வானவில்கோடு !

கார்கூந்தல் தன்னில் வகிடெனும் நேர்கோடு
விற்புருவம் நெற்றி அழகில் வளைகோடு
மெல்லிதழ் தன்னில் நியூட்டன் ஒளிக்கோடு
பார்நெஞ்சில் வானவில் கோடு !
-----இயல்புக்கவிதை இப்பொழுது யாப்பில் இன்னிசை வெண்பா.

கருங்கூந்தலில் வகிடெனும் நேர்கோடு
கரும்புருவம் நெற்றியில் வளைகோடு
அரும்பும் புன்னகை ஒளிக்கோடு
விரும்பும்விழி போடுதடி வானவில்கோடு
----இயல்புக்கவிதை இப்போது வஞ்சியின் விருந்தோம்பல் .

நேர்கோட்டு வகிட்டனள் நேராகப் பார்க்கிறாய்
கார்க்கூந்தலி வளைபுருவத்தை நெரித்தும் பார்க்கிறாய்
யார்சொல்வார் உன்புன்னகை ஒளிக்கோட்டுத் தத்துவத்தை
பார்வைபோடும் ஆயிரம் வானவில் கோட்டெழிலை !
-------இப்போது வஞ்சி நாற்சீரடி பெற்று நடக்கிறாள்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-21, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே