குப்பை மேனியின் அற்புதம்

நிலை மண்டல ஆசிரியப்பா

குப்பை உடம்பை கிளரி எடுத்தே
தளர்வை நீக்கி அடர்ந்த அழகை
மிகுந்துக் கொடுக்கும் சிறந்த தழையாம்
குப்பை மேனியெனும் சிறந்த மருந்தே
மிகுந்ததாய் உண்ட உணவினை செரிக்கச்
செய்யும் அதனின் சாற்றையும் குடித்தால்
காதின் வலியை குறைக்க சாற்றை
காதின் ஓரமே தடவினால் குறையுமே
பெரிய புண்ணை ஆற்றத் தழையைக்
கட்டியே வைத்திடின் ஆறியும் போகுமே
தொண்டை வலியுடன் இருமல் சளிக்கு
சாற்றை பிழிந்து தொண்டையில் தடவினால்
சட்டென தீர்வும் கிடைத்திட மகிழ்வாம்
சொறியுடன் சிரங்கை அகற்றிட தழையின்
சற்றையும் உடலில் தடவியே குளித்தால்
எவ்வகை புண்ணும் வலியும் தீருமே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Apr-21, 11:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே