மனிதர்களே...! மனிதர்களே....!
மனிதர்களே.! மனிதர்களே...!
நாம் ......................!- ஒற்றுமையில்
மலையாய் ஓங்கி நிற்போம் ..!
உதவி செய்வதில் மலை விழ்
அருவியாய் இருப்போம் ...!
கடமையில் உதிக்கும்
சூரியனாக திகழ்வோம் ...!
பொருமையில் ஆழ் கடலாக இருப்போம் !
புன்னகையில் தென்றல்
காற்றாக வீசுவோம்..!
கோபத்தை தள்ளி வைப்போம்
பிறர் பார்வைக்கு குளிர்
நிலவாக காட்சியளிப்போம் !
பொதுவாக இம் மண்ணில்
வாழும் நாம் அன்பை விதைத்து
மனித நேயத்தை அறுவடை செய்வோம் !
இருக்கும் வாழ்வை
இறக்கும் வரை வாழும் நாம்
வாழ்த்த வாழ்க்கைக்கு ஓர்
அர்த்தம் தர வேண்டாமா?
அதற்க்கு நம்மிலே ஒரு
மாற்றம் வேண்டும் ...!
மாற்றம் ஒன்றே என்றும்
மாறாத தன்மை கொண்டது !
மாற்றம் இல்லா வாழ்வு
நீர் தேங்கிய குட்டையைப்
போன்றது ..!
மண்ணும் ! விண்ணும்
காற்றும் ! கடலும் !
மலையும்! மடுவும்!
மாறும் போது... மனிதா....
நீ ....மாற மாட்டயா....?