ஆத்தா அற்புத அழகியே - கலித்துறை

ஆத்தா அற்புத அழகியே!
கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)

ஆத்தா அற்புத அழகியே ஆரணங் கே,நீ
சோத்தைத் தின்றுமே சுகமென நிற்கிறாய் சொக்கி!
நாத்தைப் பற்றியே நலமுடன் நட்டலின் இன்றே
பாத்தி கட்டியே பயிரினை ஓம்பலும் நன்றே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-21, 4:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே