வாக்கினில் செயலையும் தொடுத்திடு

" வாக்கினில் செயலையும் தொடுத்திடு "

அந்தாதி கவிதை பாடல்

தொடுவதை அறிவது மெய்யறிவது
மெய்ப்பொருள் யாவும் விண்ணகமே
விண்வெளி தொடும் நேரம்
நேரமும் நெறிதனில் வானம்.

வானவெளியில் நிலாவரும் வேளை
வேளை தோறும் துளித்துளியாய்
துள்ளித்திரியும் விளையாடும் விண்மீன்கள்
விண்மீன்களும் இருட்டைத் தொடும்வானம்

தொடும்வானம் தொட்டிலாடும் குழந்தைகளுக்கும்
குழந்தைகளும் குழைந்து விரிவடிவமாகி
விரும்பி விரித்து சிறப்பாகும்
சிரித்து மகிழ் வானிலே தொடுவானம்.

தொடுவானம் தொடுவதை அறியாப்பருவம்
அறியாமை எங்கெங்கென அறிந்திடுவீர்
அறிந்திடுபவற்றை அடுக்கடுக்காய் செய்திடுவாய்
செய்பவை யாவும் தொடுத்திடு வானம் வரை.

வானொலி கண்டு பிடித்த காலம்
காலத்தில் கணித்ததை கணமும் கணினியில்
கணினியில் இணையும் இணையில்லா தொடர்பினில்
தொடர்பினில் வாக்கினில் செயலையும் தொடுத்திடு.

எழுதியவர் : தங்கவேலு சி பதிவர். செயல (21-Apr-21, 6:17 am)
சேர்த்தது : THANGAVELU C
பார்வை : 49

மேலே