மலமாக்கி தேவைக்கும்

நிலை மண்டில ஆசிரியப்பா

பூதங்கள் ஐந்தோடும் புவியையும் கவர்ந்து
பூவிலை தழைவேர் காய்கனி தண்டுபுலால்
என்ற பலவற்றை உண்டுமே செரித்துமே
மலமாக்கி தேவைக்கும் மிகுந்தே சேகரித்து
இயற்கையின் முரணாய் பணத்தினை செய்துமே
தவறுக்கு விதையென அதனை விதைத்துமே
தரணியில் அதனின் பெயரால் தரம்பிரித்து
உணர்வினை கொன்றே கலகத்தால் பிரித்து
கடனென்ற சொல்லின் உண்மைத் திரித்துமே
தினமும் துன்பம் சூழவே காரணமாய்
புவியை நாசமாக்க வெடிவைத்து தோண்டியே
உயிர்கள் யாவை யையுமே விரட்டியே
வாழவே எண்ணும் மனிதயினம் விரைவிலே
அழிந்தால் ஞாலமும் ஆனந்தம் கொள்ளுமே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Apr-21, 5:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 59

மேலே