மதில் மேல் பூனை - ஓய்வின் நகைச்சுவை 259

மதில் மேல் பூனை
ஓய்வின் நகைச்சுவை: 259

மனைவி: ஏன்னா சுவர் ஏறி குதித்து அர்ரெஸ்ட் பண்ணினங்கோனு சொல்றாளே! சேர்விஸ்லே இருந்தப்- போ நீங்கோ இப்படி திரில்லா ஏதாவது பண்ணினீங்களா?

கணவன்: அதை என் கேட்கிறே? டி நகர் பார்க்கிலே லுங்கி கட்டிண்டு கிழிஞ்ச சர்ட்டுடன் நானும் ஆஃபீசரும் ஒருத்தரை லபக்குன்னு பிடிக்க காத்திருந்தோம். திடீர்னு உன் பிராண்ட் பாமிலியோடு வந்துட்டாள். என்னே திடுக்- கிட்டு பார்த்த மாதிரி இருந்தது. டக்கென்னு கூட வந்த ஆஃபீஸ்ர் என்னை மறச்சிட்டார்

மனைவி: ஆ..ங் இப்போ ஞாபகம் வர்றது. உடனே நேக்கு மும்பைக்கு போன் பண்ணினாள். அச்சா உங்களைப் போல ஒரு பிச்சைக்காரனை சென்னையிலே டி நகர் பார்க்கிலே பார்த்தாளாம். எதுக்கும் நீங்க உண்மையிலே உங்க ஆஃபீசிலே தான் ஒர்க் பண்ணுறீங்களானு செக் பண்ண சொன்னாள். நம்ம நெட்ஒர்க் வேர்ல்ட் வெய்ட் ஆச்சே, நோ ப்ரோப்ளேம்ன்னு சொல்லிட்டேன்!!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (22-Apr-21, 3:58 pm)
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே