தோப்பில் சந்திப்போமடி

தோப்பில் பறிக்க சுவைமாங் கனியுடன்காய்
யாப்பினில் தேமாங் கனிகாய் புளிமாங்காய்
யாப்பினில் தோப்பில் எழிலினிநீ தானடி
தோப்பில்சந் திப்போ மடி !

தோப்பில் பறிக்க சுவைமாங் கனியுடன்காய்
யாப்பினில் தேமாங் கனிமாங்காய் - பூப்பாய்நீ
யாப்பில் எழில்பூங் கவிதையாய் மாலையில்
தோப்பில்சந் திப்போ மடி

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-21, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே