அஞ்சல் அனுப்பிய அஞ்சுகம்

பிறிதுபடுப்பாட்டு
=================
ஒரு பாடல் எழுத்துகள் மாறாமல் இரு யாப்புகளில்
**
கட்டளைக் கலித்துறை
========================
அஞ்சும் விழிகளால் அஞ்சல் அனுப்பிய அஞ்சுகத்தின்
நெஞ்சத் துறங்கிட நித்தம் நினைவெலாம் நீண்டதுன்பம்
துஞ்சும் பொழுதிலும் துஞ்சா துயிர்துடித் தோய்ந்தநாட்கள்
கொஞ்சம் நினைவெழக் கோடைக் கொருமழை கொட்டுதிங்கே!
**
அறுசீர் விருத்தம்
==================
அஞ்சும் விழிகளால் அஞ்சல்
அனுப்பிய அஞ்சு கத்தின்
நெஞ்சத் துறந்கிட நித்தம்
நினைவெலாம் நீண்ட துன்பம்
துஞ்சும் பொழுதிலும் துஞ்சா
துயிர்த்துடித் தோய்ந்த நாட்கள்
கொஞ்சம் நினைவெழக் கோடைக்
கொருமழை கொட்டு திங்கே!
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Apr-21, 2:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 65

மேலே