அவரவர் விருப்பம்
கோயில் வாசலில் இருவர் பாதசாரிகள்
கோயிலில் இருந்து வந்த ஒலி
ஒருவன் காதில் ' கஞ்சி வரதப்பா'
காஞ்சிபுர சுவாமி வரதப்பன் வருகிறார்
பவனி என்று.... மற்றொருவன் காதில்
'வெறும் கஞ்சி (உணவு) வருகுதப்ப...
முதல்வன் அகப்பசியில் வாடுபவன்....
இரண்டாவது மனிதன் வயிற்று பசியில்
வாடுபவன்...... இருவருக்கும் கடவுள்
தரிசனம் கிடைத்தது.... அவரவர் விருப்பம் போல !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
