அன்றும் இன்றும்

காசில்லாமல் காற்றை அனுபவித்தோம் அன்று
காசு குடுத்து உணர்கிறோம் இன்று
ஆற்று தண்ணீரை அள்ளிக்குடித்தோம் அன்று
ஆற்று தண்ணீருக்கும் வரி இன்று
அறிந்து சுவைத்து சாப்பிட்டோம் அன்று
அள்ளிக்கொட்டி உள்ளே தள்ளுகிறோம் இன்று
இரும்பை தின்றாலும் செரித்தது அன்று
இட்லியை தின்றாலும் வலிக்கிறது இன்று
கஞ்சி அன்று ஏழைகளின் உணவு
கனவானுக்கு மருத்துவரின் பரிந்துரை இன்று
நடை போட்டு சென்றோம் அன்று
நொடித்துளி நம்வசம் இல்லை இன்று
அவசியதுக்கு சைக்கிள் ஒட்டினோம் அன்று
அதிகமான உடலை குறைக்க இன்று
கோலிக்குண்டு கிட்டிப்புள் கபடி அன்று
கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு இன்று
தண்ணீருக்குள் நாம் பாய்ந்தோம் அன்று
தண்ணீர் நம்மேல் கொட்டுகிறது இன்று
முகத்தை பார்த்து பேசினோம் அன்று
முகம்தெரியாமல் முகநூலில் அளவளாகிறோம் இன்று
கட்டாந்தரையில் தூக்கம் வந்தது அன்று
கட்டிலில் கூட உறக்கமில்லை இன்று
வாழ்க்கையில் கனவு வந்ததது அன்று
வாழ்க்கையே கனவாய் தோன்றுகிறது இன்று
முட்டு போட முடியா முன்னேற்றமிது
முக்காலம் அறிந்த மேதைகள் நினைத்தாலும்
முன்னேற்றத்துக்கு குடுத்தேன் அதிக விலை

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (26-Apr-21, 7:34 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 167

மேலே