என்று காண்பேன்

மன்னன் மகளானேன்!
பொன்னி நதியில் பூச்சூடி வளர்ந்தேன்!
மணாளன் உன்னை கான பல ஆண்டுகள் காத்திருந்தேன்!
மன்மதன் நீ ஆடல் கலையினால் என்னை ஆர்ப்பரித்தாய்!
சிரிக்க வைத்தாய்!
சிலிர்க்க வைத்தாய்!
பூ பறித்தாய்!
புல்லரிக்க வைத்தாய்!
சிந்தையில் நிறைந்தாய்!
சித்தத்தில் கலந்தாய்!
எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்!
என்னையும் மறந்தேன்!
திருவிழாவும் வந்தது! நெஞ்சம் தேவன் முகம் கண்டது!
நானத்தில் நானி போனேன்!
நாதனை பார்த்த வேளையிலே!
போட்டியில் கலந்து கொண்டாய்!
புது புது யுக்தியில் ஆடி களித்தாய்!
பொங்கி வந்த பொன்னியின் வெள்ளத்தில் புலப்படாமல் மயமாய் போனாய்!
புத்தி பேதலியும் வரை பூபாலன் உன்னை தேடி பொன்னியின் பாதையில் அலைந்தேன்!
வருடங்கள் பல கரைந்தோடியது!
ஆருடமும் உரைத்தார்கள் அவனை கான இயலாதென்று!
அருணன் வரும் வேளையில் அன்பாய் ஒருத்தியை வினவினேன்!
ஆற்றோடு தொலைத்துவிட்டேன் என் அன்பு கள்வனை! என்று உரைத்தேன்!
பூமித்தாய் மீதொருவன் தன்னை அறியாமல் அயர்ந்து கிடந்தான்!
அடைகலம் கொடுத்து அரவனைத்து காத்திருந்தேன் என அவள் உரைத்தாள்! கண்ணாளன் அவனா? என ஆவலில் காண விரைந்தேன்!
ஆனந்த கூத்தாயடியது எந்தன் மனது. என் உயிர் காதலனை கண்ட அந்த வேளையில்!

எழுதியவர் : சுதாவி (28-Apr-21, 12:09 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : enru kaanben
பார்வை : 171

மேலே