கிரீட கிருமியின் உருமாற்றம்
பதறியும் ஓட வேண்டாம்
கதறியும் அழ வேண்டாம்
உதறுங்கள் வேண்டா பயணத்தை
சிதறும் சூழல் யாவும்
குதறும் வெறி நாயாய்
பிதற்றும் பேச்சுகள் நலந்தராது
பாத்து விலகிச் செல்லலே
பாதுக்காப்பை பல மடங்காய் ஆக்கும்
பாராமுகமாய் இருந்தால் ஆபத்தே
கிறுக்காய் எதைச் செய்தாலும்
குறுக்காய் நெருப்பு மூட்டியே
சறுக்கி அதனுள் குதிப்பது போன்றதே
கட்டுக்குள் அடங்காத மரணங்கள்
கெட்டது மட்டுமே நடப்பதாய் நிகழ்வுகள்
கட்டுப்பட்டால் பிழைக்கலாம் என்னும்
அரசை நாமும் நம்புவோம்.
--------நன்னாடன்