மகளெனும் தாயே

அழகிய உறவே
அதிசய உணர்வே
அமைதியின் அர்த்தங்கள் நீ தான்!
பகல் நேர நிலவே
இரவின் கதிரே
இயற்கையின் ரசனை
நீ தான்!
தொட்டுச்செல்லும் தென்றல்
தொடர்கின்ற வானம்
தொலைதூரப்புன்னகை
நீ தான்!
சுழலும் பூமி
சுடர்விடும் ஒளியே
என் சுதந்திரக் காற்றும்
நீ தான்!
கருவறை வெளிச்சம்
கலைகளின் வடிவம்
என் கனவுகளின் மொத்தமும்
நீ தான்!
தனிமையைத் தகர்த்தவள்
தவிப்புகள் தீர்த்தவள்
தாய்மையின் அர்த்தமும் நீ தான்!
உதிரத்தின் உணர்வே
உணர்வின் உன்னதமே
உள்ளத்து களிப்பும்
நீ தான்!
வாடா வசந்தமே
வார்த்தையின் ஒலியே
எனை வாழ வைப்பவள்
நீ தான் !
மகள் என்னும் தாயே
மகிழ்ச்சியின் உருவே
என் வாழ்வின் முழுமையும் நீ தான் நீ மட்டும் தான்!

எழுதியவர் : Padmapriya (1-May-21, 11:58 am)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 520

மேலே