அரிகேசரி யென்றனின் ஆளுமை,நீ - வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(புளிமாங்கனி கூவிளம் கூவிளங்காய்)

வரமாயென தின்பமே நீயெனநான்
அரசாளுகை செய்திட ஆனதனால்
பிரியாவிடை உன்னையே சேர்ந்திடச்செய்
அரிகேசரி யென்றனின் ஆளுமை,நீ!

- வ.க.கன்னியப்பன்

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

மூன்று சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எ.காட்டு:

வஞ்சி விருத்தம்
(புளிமாங்கனி கூவிளம் கூவிளங்காய்)

வழுதாயின வின்புண நான்மனமுட்
பழுதாயின பாவியி னாலிறைவா
வழுதாய்கொலு ளைந்தயர் வாய்கொலெனாத்
தொழுதாளழு தாள்பினை சொற்றுவளால் 58

- காட்சிப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-21, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே